ஆயிரக்கணக்கில் ராக்கெட்டுகள்; ஹமாஸ் குழு தாக்குதல் - 300 பேர் பலி!
பாலஸ்தீன தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர்.
போர் அறிவிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது. அதில் தொடங்கி இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன.
பாலஸ்தீனர்களின் ஊடுருவலை தடுக்க காசா எல்லையை மூடும் நடவடிக்கையை இஸ்ரேல் அரசு தொடங்கியது. இது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
300 பேர் பலி
இந்நிலையில், 50-ம் ஆண்டை முன்னிட்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.சுமார் 20 நிமிடங்களில் இஸ்ரேலை நோக்கி 5,000 ராக்கெட் குண்டுகளை வீசினர். தரைவழியாகவும், கடல்வழியாகவும், வான் வழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் படையினர் மக்கள் மீதும், ரோட்டில் சென்ற கார்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இஸ்ரேலின் எரஸ் பகுதியில் நுழைந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேலியர்கள் 50 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் 198 பேர் உயிரிழந்ததாகவும், 1,610 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 250 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம். பாதுகாப்பான இடங்களுக்கு அருகே தங்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.