வீழ்வேனென்று நினைத்தாயோ! மாணிக்கம் தாகூரின் சர்ச்சைப் பதிவு
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் சூழலில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் வெளியிடுவது குறித்து கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக- காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளன, இதனால் திமுக தலைமை அப்செட்டில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே பேச்சுவார்த்தை தாமதம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு வேண்டும் என காட்டமாக பேசினார்.
இது சர்ச்சையான நிலையில், நேற்று சென்னையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது, கேசி வேணுகோபால் மற்றும் செல்வபெருந்தகை கலந்து கொண்டனர்.
முடிவில், கூட்டணி தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் வெளியிடுவது குறித்து கடுமையான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.
கூட்டணி குறித்து யாரும் ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் கருத்து தெரிவிக்ககூடாது என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மாணிக்கம் தாகூர் எம்பி,பாரதியாரின் வரிகளான, 'தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடித் துன்பம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்று பதிவிட்டு உள்ளார்.
