அந்த விஷயத்துக்காக மீனா கிட்ட கேட்டேன் ...தப்பா போய்டுச்சு - போட்டுடைத்த பிரபலம்!!

Karthick
in பிரபலங்கள்Report this article
90-களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் மீனா. மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவரும் இன்னும் சில வருடங்களிலேயே நாயகி ஆகிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.
அப்படி இருக்கும் நிலையில், இன்றளவும் மீனா மீதான grace குறையவில்லை. துணை கதாபாத்திரங்களில் தற்போது அசத்தி வருகிறார் மீனா. நாயகியாக நடித்த போது, தென்னிந்தியாவின் அனைத்து மொழி அநேக நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட மீனா, தற்போது மகள் வளர்ப்பில் அதீத கவனம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அவரின் இரண்டாவது திருமணம் குறித்தும் பேசிய போது, தனது கவனம் முழுக்க தற்போது மகள் மீது மட்டுமே இருப்பதாக தெரிவித்திருந்தார் மீனா. அவ்வப்போது பிரபலங்கள் மீனாவுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி தான், தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் யூடியூப் தளத்தில் பேசிய கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அவர் பேசும் போது, ஒரு நிகழ்ச்சிக்கு காம்ஃபயர் செய்ய மீனாவை அழைத்ததாக குறிப்பிட்டவர், அதற்கு மீனாவின் அம்மா அம்மா தன்னை தவறாக பேசிவிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், நான் ஒரு தயாரிப்பாளர் மீனா கிட்ட ஒரு மேட்டர் கேக்குறேன். அப்போ அவங்க கிராக்கியா இருக்குறவங்க தானே என்றும் அது தனக்கு மிகவும் வேதனையாக இருந்ததாக கூறினார். அப்போதிலிருந்து தான் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை என்றும் மாணிக்கம் நாராயணன் தெரிவித்தார்.