கேரவன்-ல கதறி அழுதேன் - கமலுடன் முத்தக்காட்சி சீன்!! போட்டுடைத்த மீனா
மீனா
தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் மீனா. திரையில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், அவருக்கு ஜோடியாக நடித்த பெருமை மீனாவையே சேரும்.
தொடர் ஹிட் படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார். பல நாயகர்களுடனும் நடித்துள்ள மீனா, திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பிற்கு இடைவேளை விட்டார்.
தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் மீனா, தொடர் தனியார் பேட்டிகளில் திரை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வை சண்முகி படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கமலுடன் லிப்லாக்
அப்பேட்டியில், கமல்ஹாசன் சாரின் படம் என்றால் லிப் டு லிப் காட்சி இருக்கும் எனக் குறிப்பிட்ட மீனா படத்தை எடுக்க முடிவு செய்தபோது அதைப் பற்றி தான் யோசிக்கவில்லை என்றார்.
ஆனால், இரண்டாம் நாள் உதவி இயக்குநர் வந்து முத்தக் காட்சி இருக்கிறது என்றபோது, தான் பயந்துவிட்டேன் என்ற மீனா, எப்படி செய்வது என பயந்து என்னால முடியாது, டைரக்டரிடம் சொல்லுங்கள் என சொன்னதாக தெரிவித்தார்.
அதற்குள் ஷாட் ரெடி என்று சொல்ல கரவவேனில் இருந்த தான் அழுததாக சொன்ன மீனா, இந்த உரையாடல் தனக்கும் அம்மாவுக்கும் நடுவில் நடந்தது என குறிப்பிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.
கமல் சார் அருகில் வந்து இந்த முறை நோ லிப்லாக் என்று சொன்னதும் தான் தனக்கு உயிர் வந்தது என்று வெளிப்படையாக பேட்டியில் தெரிவித்தார் மீனா.