31 வயதில் திடீர் விவாகரத்து..!! கணவரை பிரிந்த மண்டேலா நடிகை!!
மண்டேலா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்கப்பட்டவர் ஷீலா.
நடிகை ஷீலா
2016-ஆம் ஆண்டு வெளியான "ஆறாது சினம்" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. தொடர்ந்து திரௌபதி, மண்டேலா மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் போன்ற படங்களிலும், ஜி தமிழ் தொலைக்காட்சியின் தொடர் ஒன்றில் நடித்துள்ளார் ஷீலா.
மண்டேலா படம் இவர் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக மாறியுள்ளது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஷீலாவிற்கும் நடிப்பு பட்டறை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை ஷீலா திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது, ''திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும் சோழன்'' என அவர் கூறியுள்ளதால் தனது கணவரை விவகாரத்து செய்யப் போகிறார் என்று தெரிய வந்துள்ளது. எதனால் இந்த முடிவு என்பது குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
— Sheela (@sheelaActress) December 2, 2023
நன்றியும் அன்பும் @ChozhanV