எல்லாருமே அத மட்டும் தான் பாத்தாங்க!! தனது சோகம் குறித்து மனம்திறந்த சரண்யா நாக்!!

Jayam Ravi
By Karthick Dec 01, 2023 03:43 PM GMT
Report

சரண்யா நாக் காதல் படத்தில் நடித்த போதே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தார்.

சரண்யா நாக்

பெரும்பாலும் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை அனைவரும் பெரிய வெற்றியை பதிவு செய்திடவில்லை. அதற்கு பல்வேறு காரணமாக இருக்கலாம். அவ்வாறு திறைமைசாலியாக இருந்தும் பெரிதாக வெற்றியை பதிவு செய்ய முடியாதவர் நடிகை சரண்யா நாக்.

kadhal-movie-actress-saranya-nag-emotional-speech

காதல் படத்தில் கதாநாயகியின் தோழியை நடித்த போதே கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து அவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "பேராண்மை" படத்தில் நாயகிகளில் ஒருவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனது. கடைசியாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் பணியாற்றியிருந்தார்.

டாப் ஹீரோ படம்; கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்க - மஹிமா ஷாக் தகவல்!

டாப் ஹீரோ படம்; கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்க - மஹிமா ஷாக் தகவல்!

அப்படி தான் பாத்தாங்க

இந்நிலையில் தான் இவர் தனக்கு ஏற்பட்ட சோகம் குறித்து மனதிறந்துள்ளார். அந்த பேட்டியில், தைராய்டு பிரச்சனை இருந்ததால் எடை அதிகரித்தது, இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. வெளியில் எதுவும் சொல்லிவிடுவார்களோ, தப்பு தப்பா பேசிடுவார்களோ என்று எதுவும் பண்ணவில்லை.

kadhal-movie-actress-saranya-nag-emotional-speech

எல்லோரும் உடல் பருமனாக இருப்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.இதனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நான் எதுவுமே செய்யவில்லை, சேமிப்புகளை வைத்து என்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்தேன். இந்த இடைவெளிக்கு காரணம் என்னுடைய மனப்பான்மை தான், நம்மைச் சார்த்த ஊடகம், சினிமா, உடன் இருப்பவர்கள் என யாருமே சப்போர்ட் செய்யவில்லை என மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.