டாப் ஹீரோ படம்; கூப்பிட்டு அவமானப்படுத்தினாங்க - மஹிமா ஷாக் தகவல்!
தான் அனுபவித்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை மஹிமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை மஹிமா
2012-ஆம் ஆண்டு இயக்கிய ‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா நம்பியார். அந்த படத்தை தொடர்ந்து மகாமுனி , குற்றம் 23, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் ராகவா நடிப்பில் ‘சந்திரமுகி 2’, ‘ரத்தம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.
மோசமான அனுபவம்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மஹிமா நம்பியார், நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அதில் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் நான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் ஒரு நடிகருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆனேன்.
நடிக்க கமிட் ஆகி அந்த படத்திற்கான படப்பிடிப்பு 4 நாட்கள் நடந்தது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என மேனஜர் ஒருவர் என்னிடம் கூறினார். நானும் சில நாட்களுக்கு பிறகு அவரிடம் பேசினேன் அப்போது அவர் இந்த படத்தில் இருந்து உங்களை தூக்கிட்டாங்க உங்களுக்கு பதில் வேறொரு நடிகையை நடிக்க கமிட் செய்து இருக்கிறார்கள் என கூறினார்.
இதனை கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களே நடிக்க அழைத்தார்கள் பிறகு ஏமாற்றி அவமானபடுத்திவிட்டார்கள். இதனை தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.