திரையுலகம் பாதுகாப்பானதா.? நான் அப்படி சொல்ல மாட்டேன் - மஹிமா நம்பியார் ஓபன் டாக்..!
திரையுலகங்கள் நடிகைகளுக்கு மிகவும் ஆபத்தானது என கருத்துக்கள் அதிகளவில் இருந்து வரும் நிலையில், அது குறித்து நடிகை மஹிமா நம்பியார் கருத்து தெரிவித்துள்ளார்.
மஹிமா நம்பியார்
அன்பழகன் கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்கிய ‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா நம்பியார். அந்த படத்தை தொடர்ந்து மகாமுனி , குற்றம் 23, போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
அண்மையில் மஹிமா நடிப்பில் மலையாளத்தில் வெளியான "RDX" படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் ராகவா நடிப்பில் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘சந்திரமுகி 2’, ‘ரத்தம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதா..?
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், திரையுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு பதிலளித்த அவர், மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து இதற்கு தான் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறி, தன்னை பொறுத்தவரையில், எந்த மோசமான அனுபவமும் தனக்கு நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 800 திரைப்படத்தில் முரளிதரனின் மனைவி கதாபாத்திரத்தில் மஹிமா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.