காதலை கண்டித்த தாய்; அக்கா, தங்கை எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சி சம்பவம்
காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
காதலுக்கு எதிர்ப்பு
மணப்பாறை, அயன்புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சகாதரிகள் வித்யா மற்றும் காயத்ரி. இவர்கள் இருவரும் ருப்பூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்களது தாய் அகிலாண்டேஸ்வரி அதுகுறித்து விசாரித்துள்ளார்.
சகோதரிகள் தற்கொலை
அப்போது இருவரும், தங்களுடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளனர். உடனே தாய் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்து எதிர்த்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சகோதரிகள் இருவரும் வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.