புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில்: யானை லட்சுமி திடீர் உயிரிழப்பு!
புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானை லட்சுமி
புதுச்சேரியில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் கோவில். இந்த கோவிலில் லட்சுமி என்ற பெண் யானை இருந்தது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தது.
1997 ஆம் ஆண்டில் லட்சுமி யானை இங்கு வந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று மனக்குள விநாயகர் கோயிலுக்கு இந்த யானையை வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கோயிலில் ஆசி வழங்கி வந்தது.
உயிரிழப்பு
இந்நிலையில், அதிகாலையில் பாகன் சக்திவேல் யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தது. லட்சுமி உயிரிழந்ததும் பாகன் சக்திவேல் கதறி அழுதார்.
பக்தர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.