ஆந்திராவில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய யானை... - வைரலாகும் வீடியோ...!

Viral Video Andhra Pradesh Elephant
By Nandhini Nov 16, 2022 05:55 AM GMT
Report

ஆந்திரா மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய யானையை வனத்துறையினர் கடுமையான போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றியுள்ளனர்.

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் விவசாய கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்தது. இதனையடுத்து, அந்த யானையால் வெளியேற முடியாமல் கிணற்றில் உயிருக்கு போராடியது.

யானையின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், வனத்துறையினரும் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு கிணறு உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட கிணற்று சுவரின் ஒரு பகுதியில் யானை வெளியே வந்தது.

வெளியே வந்த யானையை போலீசார் சத்தம் கொடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -   

andhra-pradesh-chittoor-viral-video