லாட்டரியில் விழுந்த ரூ.25 கோடி பரிசு, அடிச்ச லக்கை தவறவிட்ட நபர் - கடைசியில் ட்விஸ்ட்டு!

United States of America Lottery World
By Vinothini Aug 10, 2023 09:35 AM GMT
Report

ஒருவர் தனக்கு லாட்டரியில் அடித்த பணத்தை தவறவிட்டது குறித்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

லாட்டரி பரிசு

அமெரிக்காவில் பால் லிட்டில் என்பவருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வந்துள்ளது. ஆனால் அதனை அவரால் பெற முடியவில்லை, ஏனெனில் அவர் பாரில் சென்று மது அருந்தும்பொழுது அவர் வைத்திருந்த டிக்கெட்டை தொலைத்துவிட்டார்.

man-won-25-crores-in-lottery

சரியாக அந்த டிக்கெட்டுக்கு ரூ. 25 கோடி விழுந்தது, இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் இருந்தார்.

ட்விஸ்ட்டு

இந்நிலையில், அந்த டிக்கெட்டை பாரில் காசாளர் எடுத்து வைத்துள்ளார். இந்த பரிசு விழுந்தது அறிந்தும் அவர் பெற்றுக்கொள்ள நினைத்து சென்றார். ஆனால் காசாளர் மீது சந்தேகமடைந்த அவர்கள் இவரை கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் உண்மையை அறிந்த அவர்கள் பால் லிட்டில் தான் உண்மையான வெற்றியாளர் என்று அறிவித்து பரிசு தொகையை ஒப்படைத்தனர். இதனால் அவரும், அவரது குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.