6 மனைவிகள்; ஒரே கட்டில் - ரூ.80 லட்சம் செலவில் பிரம்மாண்ட படுக்கையை தயாரித்த நபர்!
ஆர்தர் ஓ உர்சோ சமீபத்தில் ரூ. 81 லட்சம் செலவில் படுக்கையை தயாரித்துள்ளார்.
ஆர்தர் ஓ உர்சோ
பிரேசில் நாட்டின் சாவோ பாலோவைச் சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ(37). இவருக்கு மொத்தம் 9 பேருடன் திருமணமாகியுள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக மூன்று பேரை விவாகரத்து செய்துவிட்டார்.தப்போது அவருக்கு மொத்தம் 6 மனைவிகள் உள்ளனர். இவர்கள் 6 பேருடனும் குழந்தை வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது ஆறு மனைவிகளில் யாரையும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை. இதனால் பிரச்சினை வராமல் இருக்க வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இப்போது வாடகைத் தாயைத் தான் நாங்கள் தேடி வருகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.
சாதனை
இவர் முன்பு உறவில் இருந்த பெண்ணுடன் 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில், படுக்கை சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார். எனவே, சமீபத்தில் ரூ. 81 லட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்துள்ளார்.
6 மனைவிகளுடன் நேரம் செலவிட பிரமாண்டமான படுக்கையை உருவாக்க 12 தொழிலாளர்கள் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்தர் என் வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய படுக்கை கட்டப்பட்டுள்ளது. ஆர்தர் கின்னஸ் சாதனையில் பெறுவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.