6 மனைவிகள்; யாருடன் குழந்தை பெற்றுக்கொள்வது - குழப்பத்தில் பிளேபாய்!
நபர் ஒருவர் 6 மனைவிகளுடன் குதுகலமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
6 மனைவிகள்
பிரேசில் நாட்டின் சாவோ பாலோவைச் சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ(37). இவருக்கு மொத்தம் 9 பேருடன் திருமணமாகியுள்ளது. ஆனால், சில காரணங்களுக்காக மூன்று பேரை விவாகரத்து செய்துவிட்டார்.
தப்போது அவருக்கு மொத்தம் 6 மனைவிகள் உள்ளனர். இவர்கள் 6 பேருடனும் குழந்தை வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது ஆறு மனைவிகளில் யாரையும் வருத்தப்படுத்த நான் விரும்பவில்லை.
வாடகைத் தாய்
இதனால் பிரச்சினை வராமல் இருக்க வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இப்போது வாடகைத் தாயைத் தான் நாங்கள் தேடி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இவர் முன்பு உறவில் இருந்த பெண்ணுடன் 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
எனவே, இப்போது மகன் வேண்டும் என்றுள்ளார். மேலும், இதற்காக $40,798 (ரூ. 33 லட்சம்) செலவழிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.