ரூ.8 கோடி பரிசு; வீட்டு வேலைக்காரரால் நபர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் - என்ன நடந்தது?
தொலைத்த லாட்டரி சீட்டை வீட்டு வேலைக்காரர் கண்டு பிடித்து கொடுத்ததால் நபர் ஒருவருக்கு ரூ.8.34 கோடி பரிசு கிடைத்துள்ளது.
லாட்டரி சீட்டு
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் கலீல் சவுச. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அதனை வீட்டில் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு அறிவிப்பு நடந்துள்ளது. ஆனால் லாட்டரி சீட்டை எங்கு வைத்தோம் என்பதை கலீல் சவுசா மறந்துள்ளார். வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் லாட்டரி கிடைக்கவில்லை. இதனால் தேடுவதை விட்டுவிட்டு தனது வேலையை பார்க்கத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் அவருக்கு இன்ப அதிர்ச்சி வந்துள்ளது.
அடித்த அதிர்ஷ்டம்
அவர் வீட்டு வேலைக்காரர் வீட்டை சுத்தம் செய்தபோது பாத்திரம் ஒன்றில் அந்த லாட்டரி சீட்டு இருப்பதை கண்டுபிடித்து, அதனை தனது முதலாளியிடம் கொடுத்துள்ளார். அந்த லாட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இதில் வரிகள் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும். இதனால் சந்தோஷத்தில் திளைத்த கலீல் சவுசா பரிசுத் தொகையில் ஒரு பகுதியை தேவைப்படும் தேவைப்படும் நண்பர்களுக்கு உதவ விரும்புவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.