இப்படியெல்லாமா செய்விங்க... காதலியை பார்க்கும் ஆசையில் அரசுப் பேருந்தை திருடிய இளைஞர்!
காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் அரசுப் பேருந்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியைச் சந்திக்க ஏற்பாடு
இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு பஸ் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை காண டிப்போவிற்கு சென்றுள்ளர். மேலும் சிலர் உணவு வாங்க சென்றுள்ளனர்.

அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது, பேருந்து காணாமல் போனதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் பேருந்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அரசுப் பேருந்து திருட்டு
அப்போது கெஸ்பேவ - பிலியந்தலை அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த பேருந்து செல்வதை கண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய சிறுவன், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்துகள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் ஒன்றில் சாவி இருந்ததை கண்ட அவர்,
தனது காதலியை பார்ப்பதற்காக அந்த பேருந்தை எடுத்துச்சென்றதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan