Monday, Apr 14, 2025

ஓடிய பேருந்து மீது சர்வ சாதாரணமாக நடந்து சென்ற பேய் மனிதர்

Top Running Madurai Govt Bus Person Walk
By Thahir 3 years ago
Report

சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் கூரை மீது நடந்து சென்ற மனிதர் கீழே விழுந்தும் காயம் அடையாமல் எழுந்து சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செக்கடி பகுதியில் இருந்து மேலுார் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் மேற்கூரையின் மீது மர்ம நபர் ஒருவர் சர்வ சாதரணமாக நடந்து வந்தார்.

இதை கண்ட பொதுமக்கள் பேருந்து ஓட்டுநருக்கு தகவல் கொடுத்தனர்.இதையறிந்த ஓட்டுநர் சட்டென்று பேருந்தை நிறுத்தினார்.

அப்போது அந்த இளைஞர் கீழே விழுந்தார்.ஆனால் காயங்கள் ஏதுமின்றி நடந்து சென்றார். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து மேற்கூரையின் மீது இளைஞர் நடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.