மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த இளைஞர் - இனியாவது ஸ்டாலின் கவனம் செலுத்துவாரா? ஜெயக்குமார்!
மெட்ரோ ரயிலில் கஞ்சா புகைத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்ததில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, அந்த நபர் மீது தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக மாறி போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!
ஜெயக்குமார்
பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.
பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
— DJayakumar (@djayakumaroffcl) July 25, 2024
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.
கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின்,… pic.twitter.com/zicpdmtgbs
கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று சுட்டிக்காட்டியுள்ளார்.