இந்த நாட்டு பெண்களை திருமணம் செய்தால் ரூ. 4 லட்சம் கிடைக்குமா? - பாய்ந்து ஃபாலோ பண்ண பாய்ஸ்!
குறிப்பிட்ட இந்த நாட்டு பெண்களை திருமணம் செய்தால் பணம் கிடைக்கும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
திருமணம்
சமீப காலமாக இணையதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அரசாங்கம் சுமார் 4.10 லட்ச ரூபாய் வழங்கும் என்ற செய்தி இணையத்தில் பரவி வந்தது.
பின்னர், ஆண்கள் இந்த தகவல்களை உண்மை என்று நினைத்து எப்படி இந்த ஆஃபரை அடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தேடவும் ஆரம்பித்துவிட்டனர்.
இதையடுத்து தான் snopes.com என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என்று நிரூபித்தனர். மேலும், இந்த தகவலை இணையத்தில் இருந்து நீக்கியது.
இணையத்தில் வைரல்
இந்நிலையில், கடந்த ஜூன் 2016-ன் பிற்பகுதியில் ஏராளமான ஆப்பிரிக்க இணையதளங்கள் இந்தத் தகவலுடன் கட்டுரைகளை வெளியிட்டன. இதனையடுத்து, முகநூலில் உள்ள பல ஐஸ்லாந்திய பெண்களுக்கு, பல நாட்டு ஆண்களிடம் இருந்து Friends request வந்தாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களது இணையதள பக்கத்தில், உண்மையாகவே இது ஒரு பொய்யான தகவல் என்றும் சில ஊடகங்கள் வதந்திகளை பரவதாகவும் உறுதி செய்தனர்.