இளம்பெண்ணுடன் உல்லாசம்.. அறையில் நிர்வானமாக இறந்து கிடைந்த நபர் - என்ன நடந்தது?
ஒருவர் ஹோட்டல் அறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உல்லாசம்..
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (42). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் தியாகராய நகரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.
அவர் அங்கு அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு வந்த அவர்கள் இரவு 7.30 மணியளவில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக புறப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.
இதனிடையே நேரம் முடிந்த பிறகும் சுரேஷ் கிளம்பாததால் லாட்ஜ் ஊழியர்கள் அறையை காலி செய்ய சொல்வதற்காக சுரேஷ்பாபு தங்கியிருந்த அறை கதவை தட்டியிருக்கிறார்கள் வெகுநேரமாக திறக்காததால் விடுதியில் உள்ள மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது, சுரேஷ்பாபு அறையில் உள்ள கட்டில் மேல் ஆடைகள் எதுவும் இல்லாமல் பிணமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சுரேஷ்பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
என்ன நடந்தது?
மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது, சுரேஷ்பாபுவுடன் ஓட்டலில் தங்கியிருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், குடும்ப வறுமை காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுரேஷ்பாபு வேலை செய்யும் ஓட்டலில் பணி பெண்ணாக வேலைக்கு சேர்ந்தேன். சுரேஷ்பாபு அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்.
மாலை இருவரும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, அதன் பின் இரவு 7.30 மணிக்கு விடுதியில் இருந்து நான் புறப்பட்டேன்' என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோதுதான் சுரேஷ் இறந்தாரா? இல்லை அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணமா என்று விசாரணை நடந்து வருகிறது.