பல பெண்களுடன் உல்லாசம்...வசமாக சிக்கியவரை நையப்புடைத்து தாலி கட்டவைத்த உறவினர்கள்

Sexual harassment Marriage Kumbakonam
By Sumathi Oct 05, 2022 03:00 PM GMT
Report

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரை பிடித்து, உறவினர்கள் காதலியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

காதல் விவகாரம்

கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22). தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா வீட்டில் வளர்ந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

பல பெண்களுடன் உல்லாசம்...வசமாக சிக்கியவரை நையப்புடைத்து தாலி கட்டவைத்த உறவினர்கள் | Man Who Had Flirted With Many Women

இந்நிலையில், துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் அடிக்கடி ஸ்வேதா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 சிக்கிய காதலன்

இதில், திருமணம் செய்துக் கொள்ள ஸ்வேதா வற்புறுத்தியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாறியுள்ளார் அந்த இளைஞர். இந்நிலையில், ஸ்வேதா தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார்.

அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காலில் விழுந்து கெஞ்சியுள்ளார் ஸ்வேதா. தொடர்ந்து, வீட்டிற்குள் புகுந்த ஸ்வேதாவின் அத்தை, மாமா மற்றும் உறவினர்கள், தியாகராஜனை அடித்து உதைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.

பின்னர் மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அதில், அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்தது தெரியவந்தது. அதேபோல், ஸ்வேதாவையும் மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.