ரூ.12 லட்சம் செலவில் நாயாக மாறிய மனிதர் - 'நரியாக மாற வேண்டும்' என விருப்பம்!
நாயாக மாறிய ஜப்பான் மனிதர் தற்போது நரியாக மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
நாயாக மாறிய நபர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்பவர் ரூ.12 லட்சம் செலவு செய்து கடந்த ஆண்டு நாயாக மாறினார். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நாய் உடையை தயாரித்து அவர் அணிந்துள்ளார். மேலும், ‘I want to be an animal’ என்ற யூடியூப் சேனலையும் டோகோ நடத்தி வருகிறார். இவர் நாயக மாறிய சம்பவம் அப்போது பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில் டோகோ தனது புதிய விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் பேசிய அவர் "நான் இன்னொருவராக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நாய்களுக்கும், மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகளும், கால்கள் மற்றும் கைகளை வளைக்கும் விதமும் உள்ளன.
புதிய விருப்பம்
எனவே, இது போன்ற தோற்றத்தை உருவாக்குவது மிகவும் கடினம். நான் வெளியில் செல்லும் போது அழுக்காகி விடுவது வருத்தமாக உள்ளது. நிறைய தூசிகள் என் தோல்களில் மாட்டிக் கொள்கின்றன. அதனை எடுப்பதற்கு நிறைய நேரம் ஆகின்றன.
தற்போது என் கைகால்களை நாய்களைப் போல் மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறேன். இருப்பினும் நான் மற்றொரு விலங்காக விரும்புகிறேன். பாண்டா, கரடி, பூனை அல்லது நரியாக கூட மாறினால் நன்றாக இருக்கும். ஆனால், அவற்றில் 2 சாத்தியமற்றதாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.