ஒரே ஆண்டு தான்...ரூ.17,500 கோடி சொத்துக்களை இழந்த இந்தியர்..? இப்படி ஒரு பின்னணியா..?
கடந்த ஆண்டு ரூ.17,500 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார இந்தியர்களில் முக்கிய இடத்தில் இருந்தவர் ரவீந்திரன்
பைஜூஸ் ரவீந்திரன்
கடந்த 2011-ஆம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடுமாக கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம் பைஜூஸ். படிக்கும் மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, பட படிப்புகளை கொடுக்கும் செயலியாக பைஜூஸ் துவங்கப்பட்டது.
நாடு பெரும் நவீன மயமாவதில் பைஜூஸ் மக்களிடம் பெரும் வரவேற்பை குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பெற்றது. இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இவர் பைஜுஸை தனது மனைவி திவ்யா கோகுல்நாத்துடன் இணைந்து நிறுவினார்.
கடந்த ஆண்டில் மட்டும் இவர்களது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட சுமார் ரூ.17,500 கோடி என கணக்கிடப்பட்டது. இந்தியாவின் கோடீஸ்வர்களில் முக்கிய இடத்தையும் இந்த தம்பதிகள் பிடித்தனர்.
17,545 கோடி சொத்து
கோடிகளில் புரண்ட Ed -Tech பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிக்கலை சந்திக்க தொடங்கியது.2022-இல் நிறுவனத்தில் தவறான நிர்வாக அணுகுமுறை, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் ,கணக்குகளில் முறைகேடு, கடன் சுமை போன்றவை தொடர்ந்து நிகழ்ந்தது.
அதே நேரத்தில், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாக புகார்கள் எழுந்த காரணத்தால், பைஜூஸ் ரவீந்திரன் வீடு, நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள் என கடந்த ஏப்ரலில் சோதனை நடந்து அதன் முடிவில், ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இது போன்ற தொடர் எதிர்மறையான சம்பவங்கள் அந்நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த, கடந்த ஆண்டில் ரூ.17,545 கோடியாக இருந்த ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்யத்திற்கு விழுந்துள்ளது.