தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.1.62 கோடி .. எஸ்கேப்பான ஊழியர் , சிலியில் ஒரு சதுரங்க வேட்டை
சிலியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவருடைய சம்பளமான ரூ.43,000க்குப் பதிலாக ரூ. 1.42 கோடி ரூபாயை தவறுதலாக அனுப்பிய நிலையில் பணத்தை பெற்ற அந்த நபர் தலைமறைவான சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய திரைப்படம் சதுரங்க வேட்டை அந்த படத்தில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு 'உன்னை ஒருத்தன் ஏமாத்தினா, அவனை எதிரியா நினைக்காதே... ஏன்னா, ஒரு வகையில அவன் உனக்கு குரு மாதிரி நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட் என அதிக பணத்திற்கு ஆசைபட்டு அதோ கதியில் போனவர்களின் கதையினை சொல்லும் வகையில் படமானது அமைக்கப்பட்டிருக்கும் .
ரியல் சதுரங்க வேட்டை
சீக்கிரமே பணக்காரன் ஆகமுடியாது அப்படி ஆகணும் நினைச்சா அதோ கதிதான் என்பதுதான் சதுரங்க வேட்டை. ஆனால் தற்போது சிலி நாட்டில் பணத்தை தவறுதலாக தனது ஊழியருக்கு அனுப்பி விட்டு நிஜ சதுரங்க வேட்டையில் சிக்கியுள்ளது ஒரு நிறுவனம் .
ஆம் சிலி நாட்டில் உள்ள cialஎன்ற ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு மாத சம்பளமாக (500,000 பெசோக்கள்) இந்திய மதிப்பில் ரூ.43,000 கொடுத்து வந்தது. இந்த நிலையில் மே மாதம் அவரது வங்கி கணக்கில் (165,398,851 சிலி பெசோக்கள்) தவறுதலாக தவறுதலாக ரூபாய் 1.42 கோடி செலுத்தப்பட்டிருந்தது.

இதனை உடனடியாக அந்த நிறுவனம் கண்டுபிடிக்கவில்லை , சில நாட்களுக்கு பிறகு அந்த ஊழியரை தொடர்பு கொண்டு திருப்பி கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
அதாவது அந்த ஊழியருக்கு அவரது சம்பளத்தை விட 286 மடங்கு அதிக சம்பளம் வந்துள்ளதை உணர்ந்த அந்த ஊழியர், தனது சம்பளம் போக மீதமுள்ள பணத்தை தருவதாக கூறியிருந்த நிலையில் , திடீரென அந்த நபர் ஜூன் இரண்டாம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.
பெரும் சோகத்தில் நிறுவனம்
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகம் தனது ஊழியரை தொடர்புகொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான நபரிடம் சட்டபூர்வமாக பணத்தை மீட்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடை புடிச்சி நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல
போடுவேன் டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் துன்னுர
போடுவேன் டா மேடையில கால மேல
தற்போது தலை மறைவான நபர் இந்த பாடலை பாடியபடி இருப்பாரே என இணைய வாசிகள் குமுறிவருகின்றனர்.
ரெட்டை கதிரே இதோ நீ நாம் .. இன்டர் மீடியேட் தேர்வில் சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்