பணம் இல்ல; மொழி தெரியல - 115கி.மீ இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன்

Andhra Pradesh Death Odisha
By Sumathi Feb 09, 2023 07:44 AM GMT
Report

இறந்த மனைவியை, கணவன் தோளில் சுமந்து 115கிமீ நடக்கத் தொடங்கியுள்ளார்.

இறந்த மனைவி

ஒடிசா, கோராபுட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈடே குரு (30). இவரது கணவர் சாமுலு. இருவரும் ஆந்திராவில் வசித்து வந்தனர். மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணம் இல்ல; மொழி தெரியல - 115கி.மீ இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன் | Man Was Carrying Dead Wife On His Shoulders Odisha

தொடர்ந்து அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. கணவர் கையில் பணமும் இல்லை. அதனால், டிஸ்சார்ஜ் செய்து மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, விஜயநகரம் மாவட்டம் வந்தபோது மனைவி எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.

போலீஸ் உதவி

இதனால், ஆட்டோ ஓட்டுநர் அவரை பாதியில் இறக்கி விட்டுள்ளார். ஊருக்கு போக இன்னும் 115கிமீக்கு மேல் இருந்த நிலையில் மனைவியை தன் தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத்தொடங்கியுள்ளார். 4கி.மீ நடந்து சென்ற நிலையில் அவரை கவனித்த மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே போலீஸார் அவருக்கு உணவை கொடுத்து, தனியார் ஆம்புலன்ஸை அழைத்து மனைவியின் உடலையும், அவரையும் வீட்டில் விடும்படி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.