மனைவி இறந்த ஒரு வருடத்தில் சைலண்டாக 2-வது திருமணம் செய்த அருண்ராஜா காமராஜ்...!

Marriage Arunraja Kamaraj
By Nandhini Oct 31, 2022 12:43 PM GMT
Report

மனைவி இறந்த ஒரு வருடத்தில் சைலண்டாக அருண்ராஜா காமராஜ் 2-வது திருமணம் செய்துள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அருண்ராஜா காமராஜ்

‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் அருண்ராஜா காமராஜ். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

இதனையடுத்து, ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை இயக்கினார். உயிரிழந்த மனைவி கடந்த ஆண்டு இவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 38. தாலி கட்டிய மனைவியை தொட்டு கூட பார்க்க முடியாமல் கதறி அழுத அருண்ராஜா காமராஜின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

arunraja-kamaraj-marriage

2வது திருமணம்

அருண் ராஜா காமராஜின் மனைவி உயிரிழந்து ஒரு வருடம் ஆகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 28 தேதி இவருக்கு 2ம் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அருண் ராஜா காமராஜு, இறந்த மனைவி சிந்துஜாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இவர் தன்னுடைய 2ம் திருமணம் குறித்த தகவலை வெளியிடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.