கொழுந்தியாளைதான் பிடிக்கும்; கல்யாணம் பண்ணிவைங்க - இளைஞர் போராட்டம்!

Uttar Pradesh Marriage Relationship
By Sumathi Aug 30, 2025 04:59 PM GMT
Report

 இளைஞர் ஒருவர் நடத்திய விநோத போராட்டம் கவனம் பெற்றுள்ளது.

அத்துமீறிய இளைஞர்  

உத்தரப்பிரதேசம், கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021ல் திருமணம் நடைபெற்றுள்ளது.

கொழுந்தியாளைதான் பிடிக்கும்; கல்யாணம் பண்ணிவைங்க - இளைஞர் போராட்டம்! | Man Want To Get Marry Sister In Law Strik Up

அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து 2 ஆண்டுகள் வாழ்ந்து வரும் நிலையில், மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தனது மனைவியிடமும் கூறியுள்ளார். இதனால் மனைவி திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடுரோட்டில் இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை - பரபரப்பு

நடுரோட்டில் இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை - பரபரப்பு

விநோத போராட்டம்

இந்நிலையில், ராஜ் மின்சார கோபுரத்தின் மீது ஏறி, ‘எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,

கொழுந்தியாளைதான் பிடிக்கும்; கல்யாணம் பண்ணிவைங்க - இளைஞர் போராட்டம்! | Man Want To Get Marry Sister In Law Strik Up

ராஜ் சக்சேனாவை சமாதானம் செய்ய முயன்றனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக அவரது மனைவியின் தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பின் இறங்கி வந்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘எனது கொழுந்தியாளும் என்னை காதலிக்கிறார். நானும் அவரை விரும்புகிறேன். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இதனால் அவரது குடும்பம் தவித்து வருகிறது.