பள்ளியில் குழந்தையைப் பெற்றெடுத்த 9ஆம் வகுப்பு மாணவி - பகீர் சம்பவம்!
9ஆம் வகுப்பு மாணவி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9ம் வகுப்பு மாணவி
கர்நாடகா, சமூகநலத் துறை அமைச்சகத்தின் கீழ் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது.
அங்கு 17 வயதுடைய மாணவி ஒருவர் அங்கேயே தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளியில் இருந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த மாணவி பள்ளி கழிவறைக்கு சென்றுள்ளார்.
உடனே சக மாணவிகள் ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் வந்து பார்க்கும்போது, மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின் அந்த மாணவியையும், குழந்தையையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பாத்ரூமில் பிரசவம்
அங்கு இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தகவலறிந்து போலீஸார் விசாரித்ததில், 9 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவரால் தான் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்த மாணவி தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 28 வயது கொண்ட ஒரு நபரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் அந்தப் பள்ளியின் முதல்வர், விடுதி காப்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.