ரூ.60 லட்சம் வாங்கியும் அடங்காத ஆசை - கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு!
வரதட்சணை கொடுமை தாங்காமல் இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
பெங்களூரு, சுத்தகுண்டேபாளையாவை சேர்ந்த பிரவீன் மற்றும் கோப்பல்லை சேர்ந்த ஷில்பாவிற்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 35 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார், 150 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். பின் ஐடி பணியை துறந்த பிரவீன், பெங்களூருவில் பானி பூரி கடையை தொடங்கி உள்ளார்.
இதற்காக மனைவி வீட்டாரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு பிரவீன், வரதட்சணை தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
பெண் விபரீத முடிவு
இந்நிலையில், ஷில்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக முதலில் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்த பிரவீன், பின் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த ஷில்பாவின் தாய், போலீஸில் தனது மகளை வரதட்சணை கொடுமை செய்து பிரவீன் சித்ரவதை செய்து வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில், பிரவீனை கைது செய்த காவல்துறையினர், அவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.