கட்டில் மெத்தையை காராக மாற்றிய நபர் - நடுரோட்டில் ஓட்டி அசத்தல்
கட்டில்மெத்தை காரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வினோத கார்
மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் நவாப் ஷேக்கில். இவர் கட்டில் மெத்தையை காராக மாற்றி வடிவமைத்துள்ளார்.
காரின் உதிரி பாகங்களை கட்டில் மெத்தையுடன் இணைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். இதற்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளார். சுமார் 1 ஆண்டுகளாக போராடி, தெருவில் ஓட்டி வந்துள்ளார்.
வைரல் வீடியோ
அப்போது சாலையில் வாகனத்தை மறித்த போலீசார், அதற்கான உரிமங்கள், பதிப்புரிமையை கேட்டதால் சிக்கலை சந்தித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், அவர் மோட்டார் சைக்கிள்களுடன் போட்டிபோட்டு சாலையில் கட்டில் காரை ஓட்டுகிறார். சில இடங்களில் மற்ற வாகனங்களை முந்தி செல்வதான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.