ஆர்சிபி ஜெர்சி அணிந்திருந்தால் ஆட்டோ சவாரி இலவசம் - வைரலாகும் வீடியோ
ஆர்சிபி ஜெர்சி அணிந்த ரசிகர்களுக்கு இலவச சவாரி வழங்குவதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ஆர்சிபி ஜெர்சி
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் குஜராத் அணி, பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,
ஆட்டோ ஓட்டுநரான அஸ்ஸு சுல்தான் என்பவர் ஆர்சிபி ஜெர்சி அணிந்த ரசிகர்களுக்கு இலவச சவாரிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மெட்ரோ நிலையங்களுக்கு வெளியே நின்றிருந்த சுல்தான், "ஆர்.சி.பி ஜெர்சி அணிந்தவர்களுக்கு இலவச பயணம்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையுடன் நின்று கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டோ இலவசம்
சில மாதங்களுக்கு முன், தனது ஆட்டோவின் உள்ளே "ஆட்டோ கன்னடிகாவுடன் கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு பலகையை வைத்திருந்தார்.
அதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கன்னட வாக்கியங்களும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம்பெற்றிருந்தன. இந்தப் பதிவும் முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.