மறுத்த இளம்பெண்; கடைக்குள் புகுந்து கொடூரமாக தாக்கிய இளைஞர் - பகீர் பின்னணி!

Attempted Murder Madurai Crime
By Sumathi Nov 25, 2024 05:21 AM GMT
Report

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலை காதல்

மதுரை, ஒத்தக்கடை அருகே ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த இளாம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

சித்திக் ராஜா

அந்த பெண்ணை சித்திக் ராஜா என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு அந்த பெண்ணை தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்ததால், ஆத்திரத்தில் இளைஞர் ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்.

இளைஞர் வெறிச்செயல்

இதில் பெண்ணிற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருதலையாக காதலிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

ஒருதலையாக காதலிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற சித்திக்கிற்கு கைமுறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.