மகள் மீது வந்த சந்தேககம்..DNA டெஸ்ட் எடுத்த தந்தை - வெளியான ஷாக் தகவல்!
மகள் மீது ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க டி.என்.ஏ டெஸ்ட் எடுத்ததில் பல உண்மை வெளிவந்துள்ளது.
DNA டெஸ்ட்
வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர் தன் மகள் தன்னை போலவோ, தன் மனைவியைப்போலவோ இல்லை என்ற எண்ணம் அவருக்கு உருவாகியுள்ளது. இதன் காரணமாக தனது மனைவி மீது அவருக்கு சந்தேகமும், பல குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
எனவே டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கச்சொல்லி வலியுறுத்தியுள்ளார். இதனை மறுத்த மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் இதனால் மன உளைச்சலுக்குள்ளாகி, மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.
இந்த சண்டை தொடர்ந்து வளர்ந்து கொண்டே போனதில் மனைவி ஹாங், மகள் லேனுடன் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு குடிபெயர்ந்துள்ளார்.இங்கே தான் ஒரு திருப்புமுனை நேர்ந்தது .
லேன் சேர்ந்த புதிய பள்ளியில், அவரது வயதில், அதே பிறந்தநாள் கொண்ட வேறொரு மாணவி லேனுக்கு தோழியாகியுள்ளார். இருவருமே ஒரே ஊரில் பிறந்ததும் அவர்களுக்கு தெரியவந்தது.
ஷாக் தகவல்
இதனால் இருவம் சேர்ந்து ஒரே பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டனர்.அதில்தான் அந்த தோழியினுடைய தாயார் லேனை முதல் முறையாக சந்தித்தார்.
லேன் தன்னை போலவே இருப்பதை அந்த தாயார் உணர்ந்தார். பிறகு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது.
அதாவது இரு குழந்தைகளும் பிறந்தபோது மருத்துவமனையில் அந்த குழந்தைகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அவர்களுக்கு வந்துள்ளது.
மேலும் இந்த குழப்பத்தை எப்படி கையாள்வது என்றும் அவர்கள் பேசி வருகிறார்கள். இரண்டு சிறுமிகளும் இந்த உண்மையை சொல்லி, யாருடன் இருக்க வேண்டும் என்று அவர்களே,
முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கருதி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.