நாக்கில் கொத்தாக வளரும் முடி; சிகரெட்டால் இப்படி ஒரு பிரச்சனையா? ஷாக் சம்பவம்!
சிகரெட் பழக்கம் உள்ள ஒருவருக்கு வினோத விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
புகைப்பழக்கம்
அமெரிக்கா, ஓஹியோ நகரைச் சேர்ந்தவர் 64 வயது முதியவர். இவர் மூன்று வாரங்களுக்கு முன்பு தான் ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்றை குறைப்பதற்காக நுண்ணுயிர்க்கொல்லியான கிளைண்டாமைசினை எடுத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து, அவரது நாக்கு நிறம் மாறியுள்ளது.
எப்படி நிறம் மாறியது எனத் தெரிந்துகொள்ள அருகிலுள்ள மருத்துவரை அனுகியுள்ளார். அதனையடுத்து ஆராய்ந்து வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், முதியவர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர். இவரது நாக்கு பச்சை நிறமாக மாறியிருக்கிறது. அதில் கொஞ்சம் முடியும் முளைத்திருக்கிறது.
நாக்கில் முடி
தோல்களின் செல்லில் உள்ள அடுக்குகள் அசாதாரன முறையில் நாக்கில் வளர்வதால் தான் முடி முளைத்துள்ளது. இதன் காரணமாக நாக்கில் சுவை அரும்புகள் இருக்கக் கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் அழுக்குகளும் பாக்டீரியாவும் குவிந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
நாக்கின் மேற்புறத்தை ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால், மனிதர்களின் முடி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் கெராட்டின் என்ற புரதம் நாக்கில் அதிகமாக சேர்ந்துவிடும். இதனால் பப்பிலே என கூறப்படும் சுவை அரும்புகள் வழக்கத்தை விட நீளமாக வளரும்.
இப்படி நாக்கில் பாக்டீரியாவும் ஈஸ்டும் அதிகளவு சேகரமாவதன் காரணமாக, இந்த முதியவருக்கு ஏற்பட்டது போல் அசாதாரணமான நிறங்கள் நாக்கில் தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.