ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் - ஷாக்கான ரசிகர்கள்
இயக்குநர் ஆன பின் ஒரு நாளைக்கு 175 முதல் 180 சிகரெட்டுகள் வரை புகைத்திருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்த வெற்றிமாறன்
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இதில் ஆடுகளம், அசுரன், ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்றார்.
அண்மையில் லயோலா கல்லுாரியில் நடந்த “இளம் இதயத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் குறும்பட போட்டியை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வெற்றிமாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்தும், அதன் விளைவுகள் குறிததும் பேசியிருந்தார்.
ஒரு நாளைக்கு 180 சிகரெட் பிடிப்பேன்
இதயம், நம் பிறப்பு தொடங்கி, சாகும்வரை இயங்குகிறது. அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். “கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 70 சிகரெட்டுகள் பிடிப்பேன்.
இயக்குநர் ஆன பிறகு, ஒரு நாளைக்கு 175 முதல் 180 சிகரெட்டுகளை வரை புகைத்திருக்கிறேன். இதனால் சீக்கிரத்தில் சோர்வடைந்து, ஓடியாடி என்னால் வேலை செய்ய முடியாமல் போனது.” என்றார்.
அப்போது தான் இது தவறு என உணர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி புகைப்பழக்கத்தை அவர் நிறுத்தியதாகவும், நல்ல உணவுபழக்கத்தை கடைப்பிடித்து வருவதாகவும் கூறியிருந்தார் வெற்றிமாறன்.
குறிப்பு; புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு தீங்கானது
நான் ஒரு நாளைக்கு 70 தம் அடிப்பேன் - இயக்குனர் வெற்றிமாறன்#Vetrimaaran #asuranvetrimaaran #vetrimaaranmassentry #DirectorVetrimaranspeech #VetrimaranSpeech #DirectorVetrimaranvideo pic.twitter.com/5ZxOpDLzj2
— Iruthi theerppu (Cinema News) (@iruthitherppu) January 6, 2023