ஆணுக்கு ஆண் தான் மசாஜ் செய்யணும்; நோ..நெவர் - உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுநல மனு
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக மசாஜ் மையங்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பெரும்பாலான மசாஜ் நிறுவனங்களில், இதற்கென பிரத்யேகமாக பயிற்சிகளை முடித்தவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
ஆனால், சில மசாஜ் நிறுவனங்கள் இந்த தொழிலை தவறாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மசாஜ் நிறுவனங்கள்
அதில், "டெல்லியில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல், மசாஜ் செய்யப்படும் போது கதவு பூட்டப்படக் கூடாது. மேலும், ஒவ்வொரு மசாஜ் மையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு,
அதில் பதிவாகும் வீடியோக்களை தேசிய பெண்கள் ஆணையத்திற்கு தினசரி அனுப்ப உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன் மற்றும் மன்மீத் அரோரா, தனி மனித விருப்பத்தில் தலையிடுவது முறையாகாது.
மசாஜ் மையங்களை கண்காணிக்க போதிய உத்தரவுகளை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்துள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.