ஸ்கூட்டரில் தெருநாயை கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பதைபதைக்கும் காட்சி!

Bengaluru
By Sumathi Jul 21, 2024 05:42 AM GMT
Report

தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி நபர் ஒருவர் இழுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரச் செயல்

கர்நாடகா, சிருவா பகுதியில் நபர் ஒருவர் ஒருநாயின் கழுத்தில் சங்கிலியை கட்டியுள்ளார். பின் அதை தனது ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார்.

ஸ்கூட்டரில் தெருநாயை கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பதைபதைக்கும் காட்சி! | Man Tied A Stray Dog To A Scooter And Dragged

அதனையடுத்து, அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டியதில் சிறிது தூரம் ஓடிய நாய், பின்னர் ஓடமுடியாமல் விழுந்துவிட்டது. இருப்பினும், அந்த நாயை தரதரவென இழுத்தபடி, அந்த நபர் வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றார்.

100 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை - அதிர்ச்சியில் விலங்குகள் ஆர்வலர்கள்

100 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை - அதிர்ச்சியில் விலங்குகள் ஆர்வலர்கள்

குவியும் கண்டனம்

இதனைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்து அவரை கடுமையாக கண்டித்தனர். உடனே, செலர் அவரின் பிடியில் இருந்து அந்த நாயை விடுவித்தனர். அதில் நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஸ்கூட்டரில் தெருநாயை கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பதைபதைக்கும் காட்சி! | Man Tied A Stray Dog To A Scooter And Dragged

அதனைத் தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.