தெரு நாயை அடித்து கொன்ற இளைஞர்கள்! ஏன்?
குளச்சலில் மின் வாரிய ஊழியரின் காலை கடித்து குதறிய நாயை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய் தொல்லை அதிகரித்தே காணப்படுகிறது.
இறைச்சி கூடங்கள், மீன் சந்தைகளை வாழ்விடமாக அமைத்து கொண்ட தெரு நாய்கள் தற்போது ஊரடங்கால் உணவின்றி சாலையிலேயே சுற்றி திரிகிறது.
பசி மயக்கத்தால் வெறி பிடித்து அலையும் இந்த நாய்கள் கடந்த சில தினங்களாக 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியுள்ளதோடு குடியிருப்பு பகுதிகளில் பூகுந்து கோழி, ஆடு போன்ற கால்நடைகளையும் கடித்து குதறி வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் குளச்சல் பகுதியில் மின் கம்பி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 2 மின் வாரிய ஊழியர்களின் கால்களை கடித்து குதறியுள்ளது.
இதனை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து அந்த நாயை ஓட ஓட விரட்டி உருக்கட்டையால் தலையிலேயே தாக்கியுள்ளனர்.
இதனால் வெறிப்பிடித்த அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கிடையில் நாய் கடியால் படுகாயமடைந்த மின் வாரிய ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.