கம்பியை வாயில் திணித்து கொடூரமாக கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்! என்ன நடந்தது?

Attempted Murder Kerala
By Sumathi Oct 09, 2022 10:00 AM GMT
Report

வாயில் கம்பியை சொருகி கொடூரமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து தகராறு

கேரளா, இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயதான ரமேஷ். இவர் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாயில் இரும்பு கம்பி சொருகிய நிலையில், தனது வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளார்.

கம்பியை வாயில் திணித்து கொடூரமாக கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர்! என்ன நடந்தது? | Man Thrusts Rod Into Relatives Mouth Killed

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொடூர கொலை

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரமேஷை அவரது உறவினர் ஒருவரே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இரவு ரமேஷ் தனியாக இருந்தபோது சொத்து தகராறில் குடிபோதையில் இருந்த சுரேஷ், ரமேஷை கம்பியால் தலையில் தாக்கி இருக்கிறார்.

பின்னர் வாயில் கம்பியை வைத்து சொருகி கொலை செய்துள்ளார். ரமேஷை கொலை செய்த பின்னர் சுரேஷ் காட்டுப்பகுதியில் தலைமறைவாகி பதுங்கி இருந்து வந்துள்ளார்.

அதன்பின் அவர் அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர், சுரேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.