முன்னாள் காதலிக்கு திருமணம் - ஆத்திரத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை!

Uttar Pradesh Marriage Crime
By Sumathi May 05, 2025 06:08 AM GMT
Report

முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிச்சயம்

உத்தரப்பிரதேசம், கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பொட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

முன்னாள் காதலிக்கு திருமணம் - ஆத்திரத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை! | Man Threw Acid In Anger At Ex Girlfriend Marriage

அதற்காக வங்கிக்கு பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதில், நிலைகுலைந்த அப்பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன் - அதிர்ச்சி பின்னணி

மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன் - அதிர்ச்சி பின்னணி

 

நபர் வெறிச்செயல்

60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில், அப்பெண்ணின் முன்னாள் காதலர் ராம் ஜனம் சிங் பட்டேல் என்பவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முன்னாள் காதலிக்கு திருமணம் - ஆத்திரத்தில் ஆசிட் வீசிய 4 குழந்தைகளின் தந்தை! | Man Threw Acid In Anger At Ex Girlfriend Marriage

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. ஆனால், இந்த இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், வேறொரு நபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படவுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது ராம் ஜனம், மனோஜ் யாதவ் மற்றும் சுரேந்திரா யாதவ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.