பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு.. பணமோ நகையோ இல்லை, 42 கிலோ முடி - அவ்வளவு டிமாண்டா?
வீட்டின் பூட்டை உடைத்து முடியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டை மேற்கு மாட வீதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். 49 வயதான இவர் முடியை விலைக்கு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்த ஒரப்பம் கிராமத்தில் திருவிழா நடைபெற்றது, இரவு நேரத்தில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தின் அங்கு சென்றிருந்தார்.
அவர் திரும்பி வீட்டிற்கு வந்தபொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது அவர் வீட்டிற்குள் வைத்திருந்த 42 கிலோ முடியை காணவில்லை.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அவர் வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 42 கிலோ முடியை காணவில்லை என்று கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் 42 கிலோ முடியை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விசாரணையில் அவர் காவேரிப்பட்டினம் மிட்டஅள்ளி பகுதியை சேர்ந்த 27 வயதான ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது, அவரை கைது செய்து அந்த 42 கிலோ முடியை மீட்டனர்.