சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரூ.28 லட்சம் கொள்ளை

police house salem jewelery
By Kanagasooriyam Apr 05, 2021 07:41 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகை மற்றும் ரூ.28 லட்சத்தை திருடிச் சென்ற திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் பகுதியைச் சேர்ந்தவர் சபியுல்லா (54). இவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியில் கடந்த 19 வருடங்களாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் பிரிண்டிங் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை 2ம் தேதி தனது குடும்பத்துடன் சபியுல்லா ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரூ.28 லட்சம் கொள்ளை | Breaking Lock House Salem Looting Jewelery Lakh

ஊட்டியில் இருந்த அவருக்கு, பக்கத்து வீட்டிலிருந்து உறவினரான ஷியத்துல்லா என்பவர் போன் செய்தார். போனில் உங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கொடுத்தார். உடனடியாக வீட்டிற்கு திரும்பினார் சபியுல்லா. வீட்டிற்கு வந்த சபியுல்லா வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் கலைந்து கீழே விழுந்து விடந்துள்ளன. வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை சோதனை செய்த போது பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரூ.28 லட்சம் கொள்ளை | Breaking Lock House Salem Looting Jewelery Lakh

உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அருகில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிக்கு வந்து செல்பவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், 120 சவரன் தங்க நகையும், சுமார் 47 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் 19 லட்சம் பணம் மட்டும் அருகில் இருந்த அறையில் இருந்தது. இதையடுத்து ரூ.28 லட்சம் கொள்ளை போனதாக விசாரணையில் தெரியவந்தது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.