தலைக்கேறிய போதை.. நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிற்கவைத்த நபர் - கொடூர சம்பவம்!
நடுரோட்டில் ஒருவர் பெண்ணின் ஆடையை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மாரய்யா என்பவர் குடிபோதையில் வந்தார். அப்பொழுது அங்கு சென்ற அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து, தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதனை தடுத்து அப்பெண் தாக்க முயன்றார், ஆனால் போதையில் இருந்த அந்த நபர் அவரை தககினார். மேலும், அவரது ஆடைகளை கிழித்தார், அந்த பெண் எவ்வளவோ கெஞ்சியும் இவர் விடாமல் அவரது ஆடை முழுவதையும் கிழித்தார்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அந்த பெண்ணை ஆடைகள் இல்லமால் சுமார் 15 நிமிடங்களுக்கு நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் வந்து தட்டி கேட்காமல் சுற்றி வேடிக்கை பார்த்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றதும் தான் அங்கு இருந்தவர்கள் அருகில் இருந்த பேனரை கிழித்து அந்த பெண் மீது போர்த்தினர்.
இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.