நடுரோட்டில் பெண் செய்த காரியம் என்ன நடந்தது தெரியுமா?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடுரோட்டில் டாக்சி ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அவாத் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே பாத சாலைகள் பாதையை கடக்கும்போது கார் தன் மீது மோதியதாக கூறி, இளம்பெண் ஒருவர், அந்த காரின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார். மொத்தமாக அந்த பெண் ஓட்டுநரை 22 முறை அறைந்துள்ளார். இதனை அங்கிருந்த பெண் போக்குவரத்து காவலரும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. எதற்காக அடிக்கிறீர்கள் என அந்த ஒட்டுநர் கேட்டதற்கு, அவரின் செல்போனை பறித்து உடைத்த அந்த இளம்பெண்ணின் செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பெண் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? என கேள்வி எழுப்பிவரும் நெட்டிசன்கள், அவரை கைது செய்ய வேண்டுமெனக்கூறி ட்விட்டரில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றன. தவறு செய்திருந்தால் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டுமென தவிர நடுரோட்டில் மிருகதனமாக நடந்து கொள்வது மனிதாபிமானமற்ற செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றன.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
