திருநங்கையுடன் தகாத உறவு; கண்டித்த மனைவி - தவித்த கணவன் விபரீத முடிவு!

Death Chengalpattu
By Sumathi Jan 05, 2024 10:10 AM GMT
Report

 திருநங்கையுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

செங்கல்பட்டை அடுத்து பழவேலி பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது.

man love with transgender

திருமணத்திற்கு முன்பே ராமுவும் அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை சரளா என்பவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ராமுவின் பெற்றோர் அவரை கண்டித்து வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருநங்கையுடன் திருமணம்.. நெருக்கத்தில் வசமாக சிக்கிய காவலர்!

திருநங்கையுடன் திருமணம்.. நெருக்கத்தில் வசமாக சிக்கிய காவலர்!

தற்கொலை

தொடர்ந்து, அதன்பின் ஓரிரு மாதங்கள் திருநங்கை சரளாவுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்த ராமு மீண்டும் சரளாவுடன் பழகி வந்துள்ளார்.

illegal affair

இந்நிலையில் இதனை அறிந்த ராமுவின் மனைவி, இருவரையும் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ராமுவும், சரளாவும் பாலாற்றங்கலையில் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.