திருநங்கையுடன் கணவனுக்கு திருமணம் - ஆசையை நிறைவேற்றிய மனைவி!

Marriage Relationship Transgender
By Sumathi Sep 13, 2022 09:16 AM GMT
Report

கணவருக்கு திருநங்கையுடன் திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது மனைவி.

திருநங்கையுடன் காதல்

ஒடிசா, கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஹிர். இவர் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார்.

திருநங்கையுடன் கணவனுக்கு திருமணம் - ஆசையை நிறைவேற்றிய மனைவி! | Man Marries Transwoman With Wife S Consent

ஆனால் அவரது காதலை அவரின் மனைவி கண்டுபிடித்து கணவருடன் பேசியுள்ளார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது.

கணவனுக்கு திருமணம்

இத்திருமணத்தை பஹிர் மனைவியே முன்னின்று நடத்தியதோடு, தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். திருமணத்திற்குப் பிறகு பஹிர் தன் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்த இருக்கிறார். இதற்கும் பஹிர் மனைவி சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருநங்கையுடன் கணவனுக்கு திருமணம் - ஆசையை நிறைவேற்றிய மனைவி! | Man Marries Transwoman With Wife S Consent

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தை பற்றி தங்களுக்கு கவலையில்லை என்று இருவரும் தெரிவித்துள்ளனர். 

சம்மதித்த மனைவி

இத்திருமணத்தில் கலந்து கொண்ட ஆயிஷா என்பவர் இது குறித்து கூறுகையில், ``சட்டம் எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுத்திருந்தாலும், சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தற்போது நடந்திருக்கும் திருமணம் எங்களது சமுதாய உறுப்பினர்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

எங்களுக்கும் எங்களது பார்ட்னர்களை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில்,

``இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.