இப்படியும் ஒரு காதலா? திருநங்கையை காதலித்து ஊரறிய பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இளைஞர் - நெகிழ்ச்சி சம்பவம்

marriage Ulundurpet Transgender
By Anupriyamkumaresan Oct 29, 2021 06:12 AM GMT
Report

உளுந்தூர்பேட்டையில் திருநங்கையை காதலித்த இளைஞர் அவரையே ஊரறிய திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காலத்தில் காதலித்த பெண்ணையே பல இளைஞர்கள் விட்டு செல்லும் நிலையில், உளுந்தூர்பேட்டையில் ஒரு இளைஞர் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்படியும் ஒரு காதலா? திருநங்கையை காதலித்து ஊரறிய பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இளைஞர் - நெகிழ்ச்சி சம்பவம் | Ulundurpet Man Marry A Trangender Grandly

திருநங்கையான ரியா சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அப்போது தான் இவருக்கு சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மனோவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இந்த நிலையில் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாடகை வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து திருமணம் செய்து புதுமண வாழ்க்கையை தொடங்க முடிவு செய்த இவர்கள், தங்களின் நண்பர்கள், மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இப்படியும் ஒரு காதலா? திருநங்கையை காதலித்து ஊரறிய பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட இளைஞர் - நெகிழ்ச்சி சம்பவம் | Ulundurpet Man Marry A Trangender Grandly

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மனோ - ரியா ஆகிய இருவருக்கும் மங்கள வாத்தியம் முழங்க ஊரறிய பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், திருநங்கைகள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.