மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிட்ட ராணுவ வீரர் - 6 மாதத்தில் விபரீதம்!
மனைவியின் கள்ளக்காதலுக்காக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் காதல்
கிருஷ்ணகிரி, தும்பலப்பள்ளி பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு புகாரளிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், திப்பனப்பள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் தனுஷ்குமார் என்பது தெரியவந்தது.
தனுஷ்குமாருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் ஒம்பலகட்டு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவருடன் திருமணம் நடந்தது. பின் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் ராணுவத்தில் பணியாற்ற சென்றுவிட்டார்.
இந்நிலையில், அனிதாவிற்கும் அவருடைய அண்ணி கோமதியின் தம்பி அன்புவுக்கும் இடையே பழக்கம் இருப்பதாக தனுஷ் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். உடனே, தனுஷ் விடுப்பில் ஊருக்கு வந்துள்ளார். இருப்பினும், கணவரை கவனிக்காமல் அன்புவுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
கணவன் தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த அவர், அனிதாவின் செல்போனை ஆராய்ந்ததில், அன்புவுக்கு அனிதா அனுப்பிய மெசேஜ்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு உயிரிழந்தார். முன்னதாக, மனைவி அனிதாவுக்கு, தாய் பார்வதிக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் "நீ உன் அண்ணியோட தம்பி அன்புவுக்கு மெசேஜ் செய்யுறது, போன் செய்து பேசுறதும் எனக்கு தெரியும். என்னால ஒன்னும் பண்ண முடியல.
சரி நீ உன் லைஃப்பை பார்த்துக்கோ, என்னால நீ ஏன் கஷ்டப்பட்டுட்டு இருக்க, பத்திரமா இரு" என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.