தகாத உறவு: பெண்ணைக் கொன்று ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்த இளைஞர்!
திருமணம் மீறிய உறவில், இளைஞர் பெண்ணைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவு
மேற்கு வங்கம், நாடியாவைச் சேர்ந்தவர் ரோமியோ பிஸ்வாஸ். இவரது மனைவி ரியா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ரியாவுக்கும் கிரண் தேப்நாத் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கணவர் இல்லாத நேரங்களில் இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.
தொடர்ந்து கணவரை விட்டு வர ரியாவை அந்த இளைஞர் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அதிகாலையில் அவரது மகன் அழுது கொண்டிருந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்ததில் ரியா கழுத்தறுத்து இறந்து கிடந்துள்ளார். தொடர்ந்து புகார் அளித்துள்ளனர்.
நேர்ந்த விபரீதம்
சம்பவ இடம் வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையில், ஜல்பைகுரி ரயில் நிலையம் நடந்து சென்ற இளைஞர், ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ``நான்தான் ரியாவைக் கொன்றேன். நான் சொல்வதை அவள் கேட்டிருந்தால் அவளைக் கொலைசெய்திருக்க மாட்டேன்,
நானும் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்க மாட்டேன். ஆனால், என்னை வேறு வழியின்றி இந்த நிலைக்கு தள்ளிவிட்டாள். இனி நான் வாழ்வதற்கு எந்த காரணமும் இல்லை. நான் வாழ்ந்தால், என் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என பயமாக இருக்கிறது” என்று கூறிக்கொண்டே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்டார்.
இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.