விமானத்தில் வந்த காதலன்..ஸ்குரூ டிரைவரால் 51 இடங்களில் குத்தி கொலை - கதறிய இளம்பெண்!
காதலியை ஸ்குரூ டிரைவரால் காதலன் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேச மறுத்த காதலி
சத்தீஸ்கர், ஜாஷ்பூரைச் சேர்ந்தவர் நீல் குஷம். இவருக்கு இணையதளம் மூலம் பஸ் கண்டெக்டர் ஷபாஷ் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் மணிக்கணக்கில் பேசி வந்த இருவரும் பின்னர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கான் தினமும் பேச வேண்டும் என பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவரது தொல்லைகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் காதலனின் தொல்லை தாங்க முடியாமல் அவருடன் பேசுவதை நிறுத்துயுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான், குஜராத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு விமானத்தில் வந்து, நீல் குஷம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
குத்திக் கொலை
அப்போது தனியாக இருந்த அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருகில் இருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து உடல் முழுவதும் 51 முறை குத்திவிட்டி தப்பிச் சென்றுள்ளார். இதனால் அந்த இடத்திலேயே பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி தப்பியோடிய கானை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.